தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இன்னும் இரண்டு நாட்களில் விஜய் நடித்த 'மெர்சல்' வெளியாகவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 முதல்வரை விஜய் சந்தித்ததற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் இன்னும் இந்த படத்துக்கு வழங்கவில்லை என்பதால் பரபரப்பு நிலவுகிறது.

 இன்னும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டமைக்கான தடையில்லா சான்றிதழ் மெர்சலுக்கு வழங்கப்படவில்லை. இதற்காக முதல்வரை விஜய் சந்தித்திருக்கலாம். மேலும், உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் 'மெர்சல்' படத்திலிருந்து அமலாவது தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...