மிரட்டப்படும் விஜய்

அமைச்சர்களால் மிரட்டப்படும் விஜய்.......ஜி.எஸ்.டி வசனங்கள் நீக்கம்?!

நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை விமர்சிக்கும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தக் காட்சிகள் வரும் இடங்களில் ரசிகர்கள் அனைவரும் கரவொலிகளை எழுப்பி வரவேற்பு தெரிவிக்கும் நிலையில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பாக மெர்சல் படத்தில் வைக்கப்பட்ட வசனங்களுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் அவர்களது செல்வாக்கு செலுத்தும் தமிழக அரசிடமும் இது பற்றி முறையிட்டதாக தெரிகிறது.

மெர்சல் திரைப்படம் வெளியீடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் நன்றி தெரிவித்த நிலையில், படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் தமிழக அரசே இந்த படத்தை ஆதரிப்பது போன்று இருக்கும் என்பதாக முதலமைச்சரிடம் பா.ஜ.கவினர் எடுத்துக் கூறி உடனடியாக மெர்சல் பட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் நடிகர் விஜய்யை தொடர்பு கொண்ட சில அமைச்சர்கள் அவரிடம் மிரட்டும் தொனியிலும் கெஞ்சும் தொனியிலும் பேசி பா.ஜ.கவினர் சொல்லும் அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய்க்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் இருக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் பேசி அவர்களை ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க சம்மதிக்க வைத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...