கெளரவிக்கும் நிகழ்வு

வாழ்க்கையில் போதுமான வசதிகள் கிடைத்திருக்காத போதிலும் தங்களின் திறமையின் வலிமையால் சாதித்துக் காட்டியவர்களை கெளரவிக்கும் நிகழ்வு - படங்கள்

கைதடி மத்தி இளைஞர்களால் நடாத்தப்பட்ட கெளரவிக்கும் நிகழ்வு ...

இன்றைய தினம் கைதடியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் மகத்தான நிகழ்வில் எமது உதவும் கரங்கள் அமைப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

 நிகழ்வின் கதாநாயகர்கள் ஆக கடந்த 1968 ஆண்டு முதல் இன்றுவரை மகத்தானசாதனைகளை நிலைநாட்டிவர்கள் இங்கு கலந்துகொண்டிருந்தனர்.

 இவர்களின் வாழ்க்கையில் போதுமான வசதிகள் கிடைத்திருக்காத போதிலும் தங்களின் திறமையின் வலிமையால் கைதடி மத்தி மண்ணின் பெருமையை வடமாகாணம் வரைகொண்டு சென்றுள்ளார்கள்.

 இவர்களின் பிறப்பு ஒருசம்பவமாக இருந்தாலும் தங்களின்வாழ்க்கையை சரித்திரமாக்கிவிட்டார்கள் இவர்களை கெளரவிக்கும் சந்தர்ப்பத்தினை எமக்கு வழங்கியதை இட்டு உதவும் கரங்கள் அமைப்பினராகிய  நாங்கள் வாழ்க்கையின் வரப்பிரசாதமாக ஏற்றுக்கொள்வதோடு, மகிழ்ச்சியின் உச்சியில் இவர்களை கெளவிப்பதற்கு நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று பெருமையடைகின்றோம்.

உதவும் கரங்கள் கைதடி
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...