கமலை சந்தித்த சீமான்

கமல் என்னை வந்து சந்திப்பது நல்லது இல்லை அதான்நாநான் வந்து சந்திக்கிறேன்!

கமல் சீமான் சந்திப்பு

கமல் என்னை வந்து சந்திப்பது நல்லது இல்லை அதான் நான் வந்து சந்திக்கிறேன். அவரின் புரட்சிகரமான அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இதில் வேறு ஒன்னும் சொல்வதற்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் கூறினார். 

ஆதரவு இல்லை

ஆதரவு இல்லை

கமல் திராவிட அரசியலை முன்னெடுப்பதால் என்னுடைய ஆதரவு கமலுக்கு இல்லை என்பதை தீர்க்கமாக பதிவு செய்துகொள்கிறேன். கமல் என்னுடைய மூத்தவர் நான் பார்த்து ரசித்து நேசித்து வளர்ந்த ஒரு மிகப் பெரிய நடிகர். மேலும் என் ஊர் காரர் என்பதால் தான் அவரை சந்திக்க வந்தேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

ரஜினியை எதிர்க்க காரணம்

ரஜினியை எதிர்க்க காரணம்

ரஜினி இந்த மண்ணின் மகன் கிடையாது.இந்த மண்ணை பற்றியும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்தும் ரஜினிக்கு என்ன தெரியும். அதை நாங்கள் பார்த்து கொள்கிறேன். என் வீட்டின் பிரச்சனை குறித்து எனக்குதான் அதிகம் தெரியுமே தவிர ரஜினிக்கோ அல்லது அதே போன்ற வேற்று ஆளுக்கோ என்ன தெரியும் எப்படி தெரியும் ஆக எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் அவர் படம் மட்டும் நடிக்கட்டும் என்றார் திரு. சீமான் 

மண்ணின் மைந்தரான கமலுக்கு தான் முன்னுரிமை ரஜினிக்கு இல்லை. மேலும் கமல் திராவிட அரசியலை முன்னெடுப்பதால் அவருடன் இணைய மாட்டேன் அவர் என்னுடைய சகோதரன் என்பதால் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவிக்க வந்தேன் அவ்வளவு தான் என்று முடித்தார் திரு. சீமான் 

கமல் சீமான் சந்திப்பு
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...