85 தமிழர்கள் கைது

செம்மரம் வெட்ட முயன்றதாகக்கூறி 85 தமிழர்கள் கைது!

85 தமிழர்கள் கைது

செம்மரம் வெட்ட முயன்றதாக திருப்பதி அருகே 85 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவின் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயற்சிகள் நடப்பதாக அம்மாநிலத்தின் செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, துணை ஆய்வாளர் அஷோக் குமார் தலைமையிலான செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், திருப்பதி - கடப்பா சாலையில் நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் வந்த லாரி ஒன்றினை அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது, அதற்குள் 85 பேர் இருந்ததைக் கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

அவர்கள் அனைவரும் செம்மரங்களை வெட்டிக் கடத்தும் நோக்கில் வந்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதனையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் திருப்பதி அருகேயுள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழர்கள் 85 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

85 தமிழர்கள் கைது ஆந்திரா
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...