போராட்ட களத்தில் சீமான்

அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

போராட்ட களத்தில் சீமான்

பழைமை வாய்ந்த சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை தற்போது இருக்கும் பாரிஸ் என்ற இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

இதனை கண்டித்து கடந்த நான்கு நாட்களாக அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் போராட்டக் களத்திற்கு வந்து கலந்து கொண்டார். 

இதற்கிடையே கைநாட்டு மற்றும் கையெழுத்து போடும் போராட்டமும் நடத்தப்பட்டது. அதிலும் திரு. சீமான் அவர்கள் தன் கையெழுத்துப் போட்டு தன் எதிர்ப்பையும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். 

அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம் எதிர்ப்பு போராட்டம் சீமான்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...