குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து ஒரு சிறு கதை

குலதெய்வ வழிபாடு

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும்...

அந்த மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தல் வாழவைப்பதுமாக இருக்கும் தெய்வங்களின் மூலம் என்ன?

அவை எப்படி தெய்வங்கள் ஆகின?

அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன

கிராம தேவதைகள் அல்லது 'ஊரம்மா' என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களாக இருப்பவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

பெண்களில் மாரியம்மாவும் ஆண்களில் கருப்பரும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார்கள். இவர்கள் தவிர மதுரைவீரன்,மாலையம்மன், மலட்டம்மா, முத்தாலம்மா... என்று எத்தனையோ தெய்வங்களின் உயிரான கதைகள் நமக்கு ஆர்வமூட்டுகின்றன.

வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல்,கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி மகுடம் கொண்டிருத்தல், நெற்றியில் போட்டு அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வங்களின் தனி அடையாளங்கள்.

மாரியம்மன் தொடங்கி, வெயிலுகந்தாள் கருக்கினிலமர்ந்தாள், வால் மேல் நடந்தாள் என்று பல தெய்வங்களின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவை வெறுமனே கதையாடல்கள்,பக்தி ரசம் சொட்டும் பனுவல்களாக மட்டும் இல்லாமல், அதன்மூலம் தமிழ்ச்சமூக அமைப்பை, அதன் பழக்கவழக்கங்களை, தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

(புராணங்கள் சாதாரன மனிதனின் கதைகளை சொல்லவில்லை.)

குடும்ப தெய்வங்கள்..

குல தெய்வங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம்; ஆனால், 'கும்பிடாத சாமி' கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரத்தில் இத்தகைய சாமிகள் உள்ளன; காட்டுக்குப் போகும்பொழுது இடி விழுந்து செத்தவர்களுக்கு, அவர்கள் செத்த இடத்திலேயே கல்லை நட்டு வைத்து 'சாமி' என்று வைத்துவிடும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், அவற்றை யாரும் கும்பிடுவது கிடையாது. கேட்டால், அதைக் 'கும்பிடாத சாமி' என்கிறார்கள். மக்களின் நம்பிக்கைகளில்தான் எத்தனை வகை!

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை திராவிட தெலுங்கு கும்பல் தனது இந்து மத  எதிர்ப்பு என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி ஆலய நுழைவு போராட்டங்களை நடத்தியது; வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; இங்கு இந்து மதமும் அழியவில்லை ; கோவில் வழிபாடும் ஒழியவில்லை; எங்கள் தெய்வங்கள் தான் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவருகிறது. சூத்திர வெள்ளாள சைவ மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க உதவிய பெரும் சூத்திரன் ராமசாமி கோவில்களை எதிர்த்தான் என்னும் பொய்கள் எத்தனை நாள் தொடருமோ...

நம் குல சாமிகளை அழிப்பதில் வெற்றிகொண்ட இன்னும் ஒருவன் செட்டி பிள்ளையார்; இந்த ஆண்டு எல்லாம் அந்த செட்டியின் உருவத்தை கும்பிடுவோர் எண்ணிக்கை பல ஆயிரம் அதிகரித்துள்ளது. அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்ட வழிபாடே பிள்ளையார் வழிபாடு; இதை பற்றி வரும் பதிவில் காணலாம்.

இலுமினாட்டி (அரச குடும்ப) ஊடகங்கள் எப்படி தங்களது உளவாளிகளை பெரும் தலைவர்களாகவும் சீர்திருத்தவாதிகளாகும் சித்தரித்தார்களோ அதை போல தாங்கள் மக்களை அடிமையாக்க உருவாக்கிய சூரிய கதிர்களை குறிக்கும் கடவுள்களையும் வணிக கோவில்களையும் பெரிதாக சித்தரித்துள்ளனர்.

பெரிய தெய்வங்கள் (அவை தெய்வங்களே இல்லை) மட்டுமே பெரிதாக காட்டப்பட்டு உண்மை தெய்வங்களான நமது குல சாமிகள் புறக்கணிக்கப்படும் சூழல் தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கினர்.

சுருங்கச் சொல்லின், இந்த கிராம தெய்வங்கள் பக்திக்குரிய உருவங்களாக மட்டுமின்றி, கிராம சமூகத்தின் பெரும் சக்தியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

இன்றைய உலகமயமாக்கலின் பின்னணியில், நம் தமிழ் சமூகம் தமது வேர்களை மெல்ல மெல்ல இழந்து வருவதையும் உணர முடிகிறது. ஆக தயவுசெய்து நமது தமிழ் வழிபாட்டு மரபுகளான குலதெய்வ அல்லது முன்னோர்கள் வழிப்பாட்டு முறைகளை யாரும் கைவிட வேண்டாம். அது நீங்கள் தமிழில் இருந்து இந்துவாக்கப்பட்டிருந்தாலும் சரி கிருத்துவனாக்கப்பட்டிருந்தாலும் சரி இசுலாமியனாக்கப்பட்டிருந்தாலும் சரி குலதெய்வத்தை எந்த மதத்தில் இருந்து கொண்டும் செய்வது மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று. இது நம் வருங்கால சந்ததியினர் வாழ்வும். நம் இனம் அழியாமல் காக்கவும் ஒரு பெரிய வழிமுறைகள் ஆகும். ஆக குலதெய்வத்தை பட்டினி போட்டுவிடாதீர் தமிழர்களே

குலதெய்வம் வழிபாடு தமிழ் மரபு
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...