நபர் விமானத்தில் நிர்வாணம்

நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர் - விமானத்தில் அத்துமீறல்

விமானத்தில் நிர்வாணமாக ஆபாசப்படம்

பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார். 

அதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார். 

இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை. 

அவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர். ஆனால், ஆபாச போதை தலைக்கேறிய அந்த வாலிபர் அவர்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்தார். உடனே, பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து அவரது கைகளை கட்டிப் போட்டனர்.

அப்போது அந்த விமானம் டாக்கா  சென்றடைந்தது. எனவே, விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் அவர் படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

விமானம் ஆபாசப் படம் நிர்வாணம்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...