குடும்பமே தீக்குளிக்க முயற்சி

காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி!

காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது வீட்டருகே உள்ள ஆரோக்கியமேரியின் மகன்கள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டு, பாதசாரிகளுக்கு இடையூறாக இருப்பதாக, பல்லாவரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தாகவும், 

இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி, மற்றும் அவரது உறவினர்கள் தன்னையும் தனது மனைவி வளர்மதியையும் தாக்கியதாகவும் புகார் கூறியுள்ளார். 

ஆனால், இந்த விவகாரத்தில், பல்லாவரம் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் ஆகியோர் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும், எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்பட்டு, தன்மீது பொய் வழக்கு போடுவதாகவும், ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

தனக்கு நீதி கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். 

ஒரே குடும்பம் தீக்குளிக்க முயற்சி
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...