மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தயாராகும் கேப்பாப்புலவு மக்கள்

மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 369ஆவது நாளாக இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 11ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கேப்பாப்புலவில் நாம் முன்னெடுத்துவரும் போராட்டமானது வெறுமனே கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டமல்ல இது ஒரு உரிமை சார்ந்த போராட்டம்.

எனவே வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டகாணிகள் அனைத்துமே விடுவிக்க வேண்டியவை இதனை வலியுறுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.

குறித்த போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கிலுள்ள கட்சி பேதங்கள் இன,மத பேதங்களை துறந்து அனைத்து அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினர், பல்கலைகழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 369 ஆவது நாளாக இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது.

கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் மார்கழி 28 ம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.

எனினும், 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமக்கான தீர்வினை அரசாங்கம் முன்வைக்காத நிலையில் ஜெனிவாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கேப்பாப்புலவு மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கவன ஈர்ப்பு போராட்டம்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...