மீண்டும் யுத்தம்!

மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரியது! இராணுவ தளபதி

மீண்டும் யுத்தம் கவலைக்குறியது

கண்டியில் ஏற்பட்டதை போன்ற பதற்றமான நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வலுவான திட்டம் தேவை என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று காலை வர்த்தகர்கள் சிலருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

30 வருடங்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக 28 ஆயிரம் படையினர் இறந்தனர்.

50 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 20 ஆயிரம் படையினர் அங்கவீனமடைந்தனர். அப்படியான நிலைமையை மீண்டும் ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரிய விடயம்.

நான் சிங்கள பௌத்தன். மேல் நாடு போன்ற சிறப்பான வரலாறு கொண்ட இடத்தில் இப்படியான சம்பவம் எப்படி நடந்தது என்பது பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கசப்பான கடந்த காலத்தை நினைத்து, இவற்றை முடிவுக்கு கொண்டு வலுவான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் யுத்தம் கவலைக்குறியது
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...