பள்ளி மாணவி கற்பம்

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது

சென்னையில் பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாகிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி சிந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக் நகர் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். 

தற்போது தேர்வு நடைப்பெற்று வரும் வேளையில் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் இதுதொடர்பாக விசாரித்தனர். 

. அப்போது சிந்தியாவுக்கும் அதே பள்ளியில் படித்த நரேஷ் என்பவருக்கும் பழக்கம் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சிந்தியாவின் பெற்றோர் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதில் தனது மகளை ஏமாற்றிய நரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரேஷை கைது செய்தனர்.

பள்ளி மாணவி மாணவன் காதல் கற்பம்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...