10பேருக்கு கடுமையான தீக்காயம்

குரங்கணி தீ விபத்து: 10 பேருக்கு கடுமையான தீக்காயம்..!

10பேருக்கு கடுமையான தீக்காயம்

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

 இவர்களில் 12 பேர் திருப்பூரில் இருந்து சென்றவர்கள் என்றும், 24 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. தீயில் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்தில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்பதிலும் கடும் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.  

தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், போலீஸார், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கிராம மக்கள் தீயில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

10பேர் படுகாயம் காட்டுத் தீ
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...