வெள்ளிக்கிழமை பேரவை

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கண்டிக்கும் வெள்ளிக்கிழமை பேரவை

வன்முறையை கண்டிக்கும் வெள்ளி பேரவை

இலங்கையின் பல பாகங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாக வெள்ளிக்கிழமை பேரவை (Friday Forum) தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றில் வெள்ளிக்கிழமை பேரவை இந்த கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கண்டி உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் இவ்வாறான அடிப்படைவாத செயல்களை வெள்ளிக்கிழமை பேரவை கடுமையாக கண்டிக்கிறது.

கடந்த 30 வருடங்களாக அனுபவித்த யுத்தம், நிறைவுக்கு வந்ததும் கடந்த கால பாடங்களை கொண்டு நல்லிணக்கத்தின் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

ஆனால் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளின் பின்னரும் இலங்கையில் இவ்வாறான இனமோதல்கள் இடம்பெறுவது வருத்தப்பட வேண்டியது.

இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாது தடுக்கும் பொறுப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் இருக்கிறது.

அத்துடன் அரசாங்கமும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வன்முறையை கண்டிக்கும் வெள்ளிக்கிழமை பேரவை
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...