தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி..!

தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

திண்டுக்கல்லில், மூன்று பேத்திகளுடன் சேர்ந்து மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. 

வத்தலகுண்டு அருகே உள்ள சிங்காரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவருக்கு, பவானி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். 

குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக, கணவன் -  மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், குழந்தைகள் மூவரும், பாட்டி கோவிந்தம்மாளின் பராமரிப்பில் வளர்கின்றனர். 

இந்த நிலையில், குழந்தைகளை பவானியிடம் ஒப்படைக்க முயற்சி செய்தபோது, அவரது உறவினர்கள் கோவிந்தம்மாளை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். 

இதுகுறித்து புகார் கொடுத்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோவிந்தம்மாள், பேத்திகள் மூவருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், கோவிந்தம்மாள், கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 

மூதாட்டி தீக்குளிக்க
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...