போதைக்காக கத்திக்குத்து

மது வாங்க காசு தராததால் கத்தியால் குத்திய வாலிபர்

போதைக்காக கத்திக்குத்து

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து மதுவாங்கி தரசொல்லி மிரட்டி கத்தியால் குத்திய வாலிபர் போலீசில் சரணடைந்தார்.

திருச்சி எட்டரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த லோகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரை, குடிபோதையில் இருந்த யுவராஜ் என்பவர்  வழிமறித்துள்ளார். 

 அவர்களிடம் மது வாங்கி குடிக்க ரூபாய் 100 கேட்டு மிரட்டியுள்ளார்.பணம் கொடுக்க மறுத்தவர்களை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து யுவராஜ் தப்பி ஓடிவிட்டார். 

இச்சம்பவத்தில் குடல் சரிந்த நிலையில், உயிருக்குப் போராடி வரும் லோகநாதன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தப்பி ஓடிய யுவராஜ் திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மது கத்தி குத்து
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...