யாழில் தனியாக மாட்டிய திருடன்

இவற்றை அவதானித்த திருடன் தனது மோட்டார் சைக்கிளை சிறிது தூரத்தில் விட்டுவிட்டு ஓட்டைக்கழற்றி

யாழ்ப்பாணம்  தம்பகாமம் பளைப்பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்து நூதனமாக திருடிய திருடன் ஒருவர் ஊர் மக்களால் வளைத்து பிடித்து நையப்புடைக்கப்பட்டார்.

இச்சம்பவமானது நேற்று திங்கள் கிழமை (17.04.2017) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கணவன் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வரும் நிலையில் மேற்படி வீட்டில் தாயும் அவரது பிள்ளையுமே வசித்து வந்துள்ளனர்.

இரவு வேளையில் அருகிலுள்ள தனது தாய் தந்தையர் வீட்டிலேயே படுத்துறங்குவது வளக்கமாகும்.இவற்றை அவதானித்த திருடன் தனது மோட்டார் சைக்கிளை சிறிது தூரத்தில் விட்டுவிட்டு ஓட்டைக்கழற்றி முதலில் சமையலறையில் இறங்கியுள்ளார்.இங்கிருந்து அங்கர்,அப்பிள்,வாசனை திரவியங்கள் போன்றவற்றை பை ஒன்றினுள் போட்டு எடுத்துகொண்டு பின்னர் அறைகளை நோக்கி நடந்துள்ளார்.

இதே சமயம் பல் துலக்குவதற்காக தாய் தந்தையர் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்து கதவை திறந்துள்ளார் வீட்டுக்கார பெண்.இதனை சற்றும் எதிர் பார்க்காத திருடன் அவரை தள்ளிவிட்டு வாசல் வழியாக ஓட்டம் பிடித்துள்ளார்.

திகைத்துபோன பெண் எழுந்து கூக்குரல் இட்டதும் தகப்பனார் முதல் ஊர் மக்கள் கூடியுள்ளனர்.எடுத்துக் கொண்டு போனவற்றை பதுக்கிவிட்டு புதினம் பார்க்க வந்தவர் போல நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிளை எடுக்கவந்த போது  கூடிநின்ற அயலவர்களிற்கு இவர் மீது சந்தேகம் வந்துள்ளது.

பின்னர் வீட்டுக்கார பெண்ணும் இவரை அடையாளம் கண்டுகொண்ட நிலையில் அனைவராலும் பூசை வளங்கப்பட்டு பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நகை பணம் என்பன அறைகளிற்குள்ளே பூட்டிவைக்கப்பட்ட நிலையில் சரியான நேரத்தில் வீட்டுக்கார பெண் சென்றதனால் இத்தோடு மாட்டினார் இல்லாவிடின் அனைத்து பொருட்களிற்கும் நாமம் போட்டு சென்றிருப்பான் என ஊர் மக்கள் பேசிக்கொண்டனர்.

தகவல்

 Karththi

Thief
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...