Home Accident News சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி

சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி

புஸல்லாவை – எல்பொட தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை சிபேட்கோ எரிபொருள் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது – 43) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலனில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – புரட்டொப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பொலிஸார்!
சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி
சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி

CLICK HERE..
சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி

CLICK HERE..
சிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி

READ MORE >>>  கொரோனா வார்டில் பணிபுரியும் வைத்தியரின் உருகவைக்கும் பதிவு!
READ MORE >>>  கொரோனா வார்டில் பணிபுரியும் வைத்தியரின் உருகவைக்கும் பதிவு!
Previous articleயாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..
Next articleநுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் காயம்