Home Jaffna News சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை

சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை

மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக இன்று அதிகாலை கண்டறியப்பட்டனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று
பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்டன.

உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளமை மீட்கப்பட்டது.

இன்று மாலை மந்திகை ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற உடற்கூற்று விசாரணையில் தீக் காயங்களுக்கு உள்ளாகியமையினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

“கணவனின் அலைபேசி கொழும்பில் தவறவிடப்பட்டது. அதனால் அவர் சீனாவின் தயாரிப்பிலான அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அந்த அலைபேசி வெப்பமாகி அல்லது சார்ஜர் வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

படுக்கை அறையில் பெரிய கானிலும் போத்தலிலும் பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளன.” என்று தடயவியல் விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் அதிகாலையில் துயரம்! தீயில் எரிந்து கணவன், மனைவி பலியான சோகம்

 

READ MORE >>>  தாயால் வீசப்பட்ட குழந்தையை காப்பாற்றிய மாணவர்கள்
more news… visit here
READ MORE >>>  பெற்றோல் திருடும்போது வெளிச்சம் போதாமையால் தீக்குச்சியை பற்றவைத்த 15 வயது திருடன்! பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், மடக்கி பிடித்து கவனித்த பொதுமக்கள்
சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை
சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை

CLICK HERE..
சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை

CLICK HERE..
சைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை

READ MORE >>>  பாலியல் துன்புறுத்தல்களுக்காக இலவச விசேட தொடர்பு இலக்கம்.
Previous articleஎரிபொருளின் விலை குறைக்கப்பட்டது! நள்ளிரவு முதல் நடைமுறை
Next articleகாத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !