Home மலைநாட்டு செய்திகள் நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அம்பகமுவ- பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 61 வயதுடைய பெண் ஒருவரும் 05 வயதுடைய முன்பள்ளிச் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

ஹட்டன் -கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

கொட்டகலை- கொமர்ஷல் பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தமை காரணமாக, சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் குறித்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் பொகவந்தலாவை பிரசேத்தில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையால், பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கினிகத்தேனை – பிட்டவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்தமையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்துடன், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் தொடக்கம் கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.

more news… visit here
READ MORE >>>  இன்று ஐந்து மணி நேரம் மின்வெட்டு!! மின்வெட்டு அட்டவணை வெளியானது
READ MORE >>>  கன்னித்தன்மையுடன் இருக்கும் ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த யுவதி;
நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!
நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

CLICK HERE..
நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

CLICK HERE..
நுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

READ MORE >>>  விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
Previous article5 வயது சிறுமியும், பாட்டியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!
Next articleவட்டுக்கோட்டையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கினார்