Home வவுனியா செய்திகள் வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது

வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சிதம்பரபுரம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிரோசன் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் கமகே மற்றும் பொலிஸ் கொன்டபிள்களான பண்டார, மதன்ராஜ், ரவிகரன் உள்ளடங்கிய பொலிஸார் துரித நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிதம்பரபுரம் பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!
வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது
வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது

CLICK HERE..
வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது

CLICK HERE..
வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது

READ MORE >>>  பலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்படுகிறது; தேரர் முறைப்பாடு.
READ MORE >>>  பலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்படுகிறது; தேரர் முறைப்பாடு.
Previous articleபிரசவ வலியினால் துடித்த பெண்ணுக்கு உதவிய பொலிஸார்! குவியும் பாராட்டு
Next articleவவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது