Home திருகோணமலை செய்திகள் விபத்தில் மாணவி படுகாயம்

விபத்தில் மாணவி படுகாயம்

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹதிவுலவெவ பகுதியிலிருந்து பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிளின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் இவர் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் எனவும் தெரிய வந்துள்ளது.

தற்போது விபத்துடன் தொடர்புடைய இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

more news… visit here
READ MORE >>>  நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை!
விபத்தில் மாணவி படுகாயம்
விபத்தில் மாணவி படுகாயம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
விபத்தில் மாணவி படுகாயம்

CLICK HERE..
விபத்தில் மாணவி படுகாயம்

CLICK HERE..
விபத்தில் மாணவி படுகாயம்

READ MORE >>>  இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
READ MORE >>>  யாழ். தென்மராட்சியில் உதவி செய்பவரால் 25 பேருக்கு நேர்ந்த கதி!
Previous articleமட்டக்களப்பு நகரில் குடும்பஸ்தர் மர்ம மரணம்! – சிசிரிவியில் சிக்கிய இளைஞர்கள் கைது !
Next articleயாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!