கிளிநொச்சியில் பொது மக்களால் பெண் சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – அக்கராயன் குளம் பகுதியிலேயே இன்று (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பிரதான வீதியோரத்திலுள்ள வீடொன்றிற்கு முன்னாலிருந்தே சிசுவானது கண்டெடுக்கப்பட்டுள்ளது
இதையடுத்து பொதுமக்கள் பொலிஸார் மற்றும் வைத்தியசாலைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வைத்தியசாலை பிரிவினர் சிசுவினை மீட்டு உடனடியாக அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டு பராமறிக்கப்பட்டு வருகின்றது.
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>> மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து; ஸ்தலத்திலேயே உடல்கருகி ஒருவர் உயிரிழப்பு!