கோடை காலம் வந்துவிட்டாலே நாம் அனைவரும் மிக குளிர்ச்சியாக இருக்க விரும்புவோம். அதனால் குளிர்பானங்கள் அதிகம் விற்க கூடிய ஒரு மாதமாக கோடைக்காலம் உள்ளது. எனவே கோடை காலத்தில் நீங்கள் குளிர்ச்சியாக இருக்க உங்கள் உணவுகளையும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.கோடை காலத்திற்கு என்று சில பருவக்கால பழ வகைகள் உண்டு. அவை நமக்கு நன்மை பயக்கின்றன. மேலும் அந்த உணவுகள் சுவையானதாக இருக்கின்றன. கோடை காலத்தில் உள்ள அதிகமான உணவுகள் உடலுக்கு நீரேற்றம் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இப்போது விவரமாக பார்க்கலாம்.
தர்பூசணி
இதில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. ஃப்ரீ ராடிகல்ஸால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும்.
இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். தர்பூசணியில் 90 % அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்னைகள் ஏற்படாது.
தக்காளி
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.இதனை தினமும் சாப்பிட்டு வாருங்கள் சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.
தயிர்
தயிர் ஒரு முக்கியமான கோடைக்கால உணவாகும். இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான சத்தை அளிக்கிறது. மேலும் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில் இருந்து இது தடுக்கிறது.மேலும் தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.பிரியாணி போன்ற உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
அவகாடோ
அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது.மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.
இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்..
பாப்பாளி
மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.. இதில் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.