தினம் ஒரு செவ்வாழை பழம் ஏன் சாப்பிடவேண்டும்?

உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். செவ்வாழை பழத்தில் விட்டமின் A உள்ளது. விட்டமின் A கண்பார்வை திறனை அதிகரிக்கச் செய்யுது மாலைக்கண் ஏற்படாமல் தடுக்கும்.

இவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.உடலில் விட்டமின் B6 குறைவாக இருந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும்.செவ்வாழை பழத்தில் உள்ளவிட்டமின் B6 சத்துக்கள் நம் உடலுக்கு தேவைப்படும் அளவில் 20 சதவீதத்தை தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைத்து விடுகிறது.ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இரண்டு இவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஓன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

 

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டுவர நரம்புகள் பலம் பெறும். நரம்பு தளர்ச்சி குணமடையும்.செவ்வாழை பழத்தில் ப்ரோமோலின் என்கிற என்சய்ம் (நொதிகள்) உள்ளது. தினம் ஒரு செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அடையும்.நரம்பு தளர்ச்சி நீங்கும்.விந்தனுக்களின் எண்ணிக்கையை மற்றும் வீரியத்தை அதிகரிக்க செய்வதால் ஆண்மை குறைவு நீங்கும்.தம்பதிகள் இருவரும் செவ்வாழை பழத்தை 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் மகப்பேறு உண்டாகும்.

 

 

செவ்வாழை பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.மதிய வேளையில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவது சிறந்தது.செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து மன அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்து, மன அழுத்தம் வராமல் தடுக்கும்.தொற்று நோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு காணப்படுகிறது. வாரம் ஒரு முறை சாப்பிட்டாலே உடலில் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது.எனவே தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தினை தவறாமல் சாப்பிட்டு உடலை ஆரயோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *