கருமையான உதட்டை சமாளித்து உதட்டை எவ்வாறு பிங்க் நிறத்தில் வைத்துக்கொள்வது?

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்களுடைய உதடு பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவோ அல்லது வெளிர் நிறமாகவும், வெலுத்துப் போயிருக்கும். நம்முடைய முகத்தின் அழகு நிறைவாக வேண்டும் என்றால், உதடுகள் பிங்க் நிறத்தில் தான் இருக்க வேண்டும். உதடுகளை இயற்கையான முறையில் பிங்க் நிறத்திற்கு எப்படி மாற்றுவது? நம்முடைய உதடுகள் பிங்க் நிறம் அல்லாமல் கருப்பு நிறத்திலும் வெளிர் நிறத்திலோ அல்லது நீல நிறத்திலோ இருப்பதற்கு காரணங்கள் என்ன என்பதைப் பற்றிபார்ப்போம் .

உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மண்ணீரல்தான் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. மண்ணீரல் பலவீனமாக இருந்தால் உதடு கருப்பாக இருக்கலாம். உதட்டால் தண்ணீரை வாய் வைத்துக் குடிப்பதுதான் சரி என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது. தண்ணீரைத் தூக்கி குடிக்கத் தேவையில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு போதும் என்று உணர்த்துவது உதடுதான். எனவே, வாய் வைத்து குடிக்கும் பழக்கம் நல்லது. உதடு தண்ணீரால் நனைந்து, உடலுக்கு தண்ணீர் போதும் என்ற சமிக்ஞையை ஏற்படுத்த தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள் எனப் பல வல்லுநர்களும் சொல்லி வருகிறார்கள்.அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.

 

உதடு கருப்பாக இருந்தால் என்ன அர்த்தம்?

மரபியல் காரணம் ரத்தசோகை, அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர், லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு , விட்டமின் குறைபாடு, அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது ,மருந்துகள் ஹார்மோன் பிரச்னை ,உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

 

உதடுகள் கருப்பு நிறத்தில் மாறுதற்கு மற்றொரு காரணம் தேவையற்ற கெட்ட பழக்கங்கள் இருப்பதும், இதோடு சேர்த்து வெயிலில் அதிக நேரம் இருக்கும் பட்சத்தில் உதடுகள் கருப்பு நிறத்தில் மாறும். இந்த காரணங்கள் ஒருபக்கம் இருக்க, நிறைய பெண்கள் தங்களுடைய உதடுகளை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செயற்கை உதட்டுச் சாயங்களை மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் உதட்டுச் சாயங்கள் ஆக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த உதட்டுச் சாயங்கள் ஆக இருந்தாலும் சரி எப்போதுமே உதட்டில் பூசி கொண்டு இருக்கக் கூடாது.விசேஷங்களுக்கு செல்லும் போது அல்லது தேவை எனும்போது மட்டும்தான் உதடுகளுக்கு உதட்டு சாயத்தை பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் உதட்டில் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு இருந்தாலும் உதட்டின் நிறம் மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


 

உதட்டை எப்போதுமே பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்?

 

முதலாவதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு – 1/2 ஸ்பூன், தேன் – 1/2 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் கலந்து உதடுகளின் மேல் தடவி வரும் பட்சத்தில் உங்களுடைய உதடு ஒரே நாளில் நல்ல மாற்றத்தை பெறும். மூன்று பொருட்களையும் சேர்த்து மெதுவாக உதடுகளில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இப்படி செய்துவர வேண்டும். அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்தால் கூட போதும். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து அதைக் கொண்டும் ஸ்கரப் செய்யலாம்.

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். மற்றும் வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.உடலுக்கு ரத்தத்தை அதிகப்படியாக ஊறச் செய்யும் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் உதடுகள் சிவப்பு நிறத்தில் மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உதட்டுக்கு மேலே தடவும் பொருட்களினால் மட்டும் உங்களுடைய உதடுகளை பிங்க் நிறத்தில் மெயின்டெய்ன் பண்ண முடியாது. ஊட்டச்சத்துகள் அவசியம் தேவை என்பதை நினைவில் கொண்டு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *