முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்யவேண்டும்?

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆண்கள் அல்லது பெண்கள் யாராக இருந்தாலும் சரி அடத்தியான தலை முடியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பெண்களுக்கு அழகு அவர்கள் கூந்தலே. ஆனால் அதிகமாக காற்று மாசு உண்டாவதால் அது நேராக நமது சருமம் மற்றும் முடிகளை பாதிக்கிறது. இதலில் இருந்து நமது முடியை பாதுகாத்து கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்து கொள்ள பல இயற்கையான முறைகள் உள்ளன. வாங்க சில குறிப்புகளை பார்க்கலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இதனை சரியாக பின்பற்றி வந்தால் தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.

மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும். எப்படியெனில் முடியானது வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாழாகிறது. இதனால் முடியின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும்.

 

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.வாரம் ஒரு முறை வெந்தயத்தை முதல் நாள் இரவு நேரத்தில் மூன்று ஸ்பூன் அளவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்து ஊறிய வெந்தய நீரை வடிகட்டி நன்கு தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஊறிய வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளரும். உடல் சூட்டையும் தணிக்கவும் உதவுகிறது.

கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு பதமான நிலையில் பொரித்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலையில் மண்டை ஒட்டில் படும்படி மசாஜ் செய்து வந்தால் முடி நன்கு வளரும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கல்களை சரிசெய்யும் குணம் உள்ளது.அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.முடி உதிர்தல் நின்று விடும்.

முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.முடி ஈரமாக இருக்கும் போது  தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால் முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால்  முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

வெளிபுறம் நாம் கூந்தலை பாதுகாப்பதை விட தினமும் நாம் சாப்பிடும் வழக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம். அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே முடி தானாக வளரும். ஆதலால் நாம் சாப்பிடும் உணவுகளை சத்தான உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *