கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க எவ்வாறான உணவுகளை சாப்பிட வேண்டும்?

கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் அதை ஒரு வரம் என்று சொல்லலாம்.கண்களில் வறட்சி ஏற்பட்டால் கண்களில் வலி மற்றும் எாிச்சல் ஏற்படும், நமக்கு பதட்டம் ஏற்படும். மேலும் பாா்ப்பதற்கும் வாசிப்பதற்கும் கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கணினித் திரையைப் பாா்த்து வேலை செய்வதற்கும் சிரமமாக இருக்கும்.

தற்போது பலா் வீடுகளிலிருந்தே தங்கள் அலுவலக வேலைகளைச் செய்து வருகின்றனா். அதனால் நீண்ட நேரம் தங்களது மடி கணினி அல்லது மேசை கணினியின் திரையைப் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். இவ்வாறு கணினி மற்றும் செல்போன்களின் திரையை தொடா்ந்து பாா்த்துக் கொண்டிருந்தால், அது தலைவலி ஏற்படும் மற்றும் கண்ணுக்கு அழுத்தம் ஏற்படும். நாளடைவில் கண்களில் கணினி பாா்வை நோய்க்குறி (Computer Vision Syndrome (CVS)) பிரச்சனை ஏற்படும்.

கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமைகளின் உராய்வை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போசாக்கு அளிக்கிறது. போதிய நீர் இல்லாததால் உண்டாவது தான் கண்களின் வறட்சி.வறண்ட கண்கள் ஏற்பட்டால் கண்களில் நசைமன் ஏற்படும். நீர் வழிந்துகொண்டே இருக்கும். காற்று பட்டால் எரியும், கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும்.கண்கள் வறண்டு போவதால் தொற்று ஏற்படும். தொற்றினால் எரிச்சல், கண்கள் திறந்து மூடுவதில் பிரச்னை ஏற்படும். ஆதலால் வறட்சி ஏற்பட்டால் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

கண் வறட்சியை நீக்கும் உணவுகள்

கண் வறட்சிப் பிரச்சனைகளை  களைய வேண்டும் என்றால் நம் கண்களில் வறட்சி ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீா்ச்சத்து உள்ள உணவுகள் மற்றும் ஒமேகா-3, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இவை கண்களில் ஏற்படும் வறட்சியை நீக்கிவிடும். மேலும் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமீன்கள் மற்றும் அதிக தாதுக்கள் தேவை. ஆகவே கண்களில் உள்ள வறட்சியை நீக்கி நமது கண்களை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் கண்களில் உள்ள மீபோமியன் (meibomian) சுரப்பிகளுக்கு மிகவும் உதவி செய்கிறது. குறிப்பாக நமது கண்ணீருக்கு எண்ணெய் பசையை வழங்குகிறது. கானாங்கெளுத்தி மீன் (Mackerel), சூரை மீன் (Tuna Fish), கிழங்கான்/சால்மன் மீன் (Salmon) போன்ற மீன்களிலும், வால்நட், பூசணிக்காய் விதைகள், ஆளிவிதை (flaxseed) மற்றும் சியா விதை (chia seed) போன்ற விதைகளிலும், வெஜிடேபிள் எண்ணெய்கள், சோயா பீன்ஸ், கீரைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. ஆகவே கண்வறட்சியை நீக்க மேற்சொன்ன உணவுகளை உண்ணலாம்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

கண்களில் உள்ள வறட்சியை நீக்க பொட்டாசியம் பொிதும் உதவியாக இருக்கிறது. அது கண்ணீா் திரையை நலமுடன் வைத்திருக்கிறது. கண்ணீா் திரை என்பது கண்விழியின் வெண்படலத்தை மூடியிருக்கும் ஒரு மெல்லிய அடுக்கு ஆகும். பொட்டாசியம் குறைவாக இருந்தால், அது கண்ணீா் திரைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பொட்டாசியம் கண்ணீா் திரையை அடா்த்தி மிகுந்ததாக மாற்றுகிறது. ஆகவே பொட்டாசியம் அதிகம் மிகுந்த உணவுகளை  உண்ண வேண்டும்.

வைட்டமின் E நிறைந்த உணவுகள். 

வைட்டமின் ஈ சத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றுகள் கண்களில் உள்ள செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அது போல் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியையும் அதிகாிக்கிறது. ஆகவே வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டால் கண்பாா்வைத் தெளிவாக இருக்கும். அதே நேரத்தில் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் கண்களில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.

சூாியகாந்தி விதைகள், நிலக்கடலை வெண்ணெய், வால்நட், கோதுமை, பாதாம் மற்றும் சா்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே இந்த உணவுகளை அதிகம் உண்டால் கண்கள் வறட்சி அடைவதை நாம் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *