பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கான காரணம் என்ன ?அதை எவ்வாறு தடுப்பது ?

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.அதுமட்டுமின்றி  பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால் ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள்.

 

பற்கள் மஞ்சளாக இருப்பது ஒன்றும் புதிய பிரச்சனையல்ல. பல்வேறு கால கட்டங்களில் அனைவரும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது நம்மின் அழகின் ஒருபகுதியாக இருப்பது மட்டுமல்லாமல் சுகாதாரத்தின் ஒருபகுதியாகவும் உள்ளது.
இதனால் பற்களை வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என பலரும் முயற்சி செய்கிறார்கள்.  ஒரு சிலர் பற்களை வெள்ளையாக்க முயற்சி செய்தால்  பற்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைத்துக்கொண்டு அத்தகைய முயற்சியை தவிர்க்கிறார்கள். முதலில் பற்கள் மஞ்சளாக மாறுவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டால் அவற்றை எளிதாக வெள்ளையாக்கலாம்.

தற்போது பற்களை வெண்மையாக்குவதற்கு டீத் ஒயிட்னிங் என்னும் முறையை மக்கள் தேர்ந்தெடுத்து மேற்கொள்கின்றனர். இருப்பினும் பற்களை இந்த செயற்கை முறையில் வெள்ளையாக்குவதால் அந்த செயல்முறையின் போது பற்கள் சேதத்திற்கு உள்ளாகின்றன. ஆனால் பற்களை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்?

* ஆரோக்கியமற்ற பழக்கங்களான் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது.

* காபி மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது.

*தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்.

* மருத்துவ நிலைகளால் எடுக்கும் மாத்திரைகளில் உள்ள கெமிக்கல்கள்.

* ப்ளூரைடு நிறைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துதல்.

*உடல் பிரச்சனைகளால் அதிகபடியான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்.

* வயதான பற்கள் நாட்கள் செல்லும்போது அதன் பொலிவை இழத்தல் போன்ற காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன.

 

உங்கள் பற்களை ஆரோக்கியமான முறையில் எளிமையாக வெள்ளையாக்குவதற்கான குறிப்புகளைக் காண்போம்.

 

1. ஆப்பிள் சைடர் வினிகர்

ஒரு ஆய்வின்படி, ஆப்பிள் சீடர் வினிகர் வெண்மையான பற்களைப் பெற உதவும். இருப்பினும் ஆப்பிள் சீடர் வினிகரை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை தினமும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால் பற்களின் மேற்பரப்பு சேதமடையும். எனவே ஆப்பிள் சீடர் வினிகரை சம அளவு நீருடன் கலந்து அவ்வப்போது வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

 

2. பல் துலக்குதல்

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் குறைந்தது 2 முறை 2-3 நிமிடங்கள் பற்களைத் துலக்க வேண்டும். பற்களைத் துலக்கும் போது வாயின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பாக நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். பற்களை வெண்மையாக்க வேண்டுமானால் டீத் ஒயிட்னிங் டூத் பேஸ்ட் வாங்கியும் பயன்படுத்தலாம்.

 

3. ஆரோக்கியமான உணவுமுறை

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பற்களின் நிறம் மாறக்கூடாது என்றால் பெர்ரிகள், காபி, பீட்ரூட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் நிறத்தை மாற்றக்கூடும்.

 

4. கரி

பல்துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசைகளை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களின் பற்களின் தன்மைக்கு ஏற்ப பற்பசைகளை உபயோகித்தால் பற்கள் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பற்பசை நிறுவனங்கள் பற்பசை கரியை கேப்சூல்களாக விற்பனை செய்கின்றன. பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தை போக்குவதற்காக விற்பனை செய்யப்படும் அவற்றை வாங்கி பற்களை வெண்மையாக்கலாம்.

 

5. ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா

மஞ்சள் பற்கள் மற்றும் கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றின் கலவை பயனுள்ளதாக இருக்கும். சந்தைகளில் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா கொண்ட பற்பசை கிடைப்பதால் அதனை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் 2 தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து வீட்டிலேயே பேஸ்ட் தயாரித்து பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கலாம்.

 

6.ஆரஞ்சு தோல்

இரவில் படுக்கும் போது ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *