பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பிகற்கான தீர்வுகள்.

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம்.

பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.

பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்க பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது.அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும். உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு, அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள். அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால் அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.

ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள். உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும். 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும். பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.

 

பித்த வெடிப்புகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள்

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால்நிச்சயம் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *