பெண்கள் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் அனைவருமே அழகான, இளமையான தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்ள்.இல்லை என மறுத்தாலும் அவர்கள் அடிமனதில் இந்த ஆசை கண்டிப்பாக ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்..! எனவே அவர்கள் அனைவரும் அழகாக இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்.

பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள்.

இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இதயத்துக்குஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் ‘செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் C நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் C உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்தப் பழங்களில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து  சருமம் அழகாகும்.

உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ‘ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

காலை உணவும், மதிய உணவும் காலம் தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

தினமும் ஒரு கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான ‘ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை’ கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

 

நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.உங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற,   ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

 

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் C, A ,E, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் முதுமை வயதிலும் சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *