நாம் ஏன் பப்பாளி பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்?

பப்பாளி மிகச் சிறந்த பழங்களுள் ஒன்றாகப் பலரால் கருதப்படுகிறது. பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் இது வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது என்பதைக் காட்டிலும் பல வகைகளில் விரிவடைகிறது.பப்பாளிப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது பலரால் வெறுக்கப்படுகிறது.ஏனென்றால் இது அசாதாரண மென்மைத்தன்மை கொண்டுள்ளதோடு இனிப்புச் சுவை மட்டுமல்லாமல், கடைசியில் கசப்புச் சுவையும் சேர்ந்தே இருப்பதால் பலர் இதை விரும்புவதில்லை.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது.

பப்பாளியில் ஏராளமான ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது என்பது ஒரு நல்ல விஷயம். இந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் கரோட்டினாய்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இதோடு, இதில் உடலுக்கு உடலுக்கு வழக்கமாகத் தேவைப்படுவதைக் காட்டிலு மிக அதிக அளவு வைட்டமின் C உள்ளது, இதில் நம் கண்களை, பார்வையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான வைட்டமின் A செறிந்து காணப்படுகிறது.

பப்பாளி பழத்தின் நன்மைகள்

முகம் பளபளப்பு

பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம் நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.

சர்க்கரை வியாதி

பப்பாளிபழம் சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.

மாத விடாய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

இதயம்

பப்பாளி (Papaya) பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க பப்பாளியில் உள்ள பொட்டாசியம் (Potassium) உதவுகிறது.

கல்லீரல்

கல்லீரல் (Liver) வீக்கத்திற்கு பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலை மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகிவிடும்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை (Digestive problem), மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகிவிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

நரம்பு தரள்ச்சி

காலையில் தினமும் பப்பாளியை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி (nerve disorder) பிரச்சனை சீக்கிரம் குணமாகிவிடும். மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகும்.

 

பப்பாளியால் கண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

நம் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான வைட்டமின் A பப்பாளியில் நிறைந்துள்ளது. போதுமான அளவு வைட்டமின் A உட்கொள்ளாதவர்களுக்கு காலப் போக்கில் கண்பார்வை கோளாறுகள் ஏற்படும் என்று மருத்துவ சோதனைகள் காட்டுகின்றன. தற்போது பல குழந்தைகள் அவர்களுக்கு வயதானாலும் தெள்ளத்தெளிவான பார்வையைப் பராமரிக்க தினமும் பப்பாளி சாப்பிடுகின்றனர். பப்பாளியால் கிடைக்கும் நன்மைகளிலேயே மிகச் சிறந்தவனவற்றுள் ஒன்றாக இது இருக்கலாம்.

புற்றுநோய்க்கு எதிரான பப்பாளியின் நன்மைகள்

பப்பாளியில் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட லைகோபீன் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில் சில சமயங்களில் இதன் பாதுகாக்கும் பண்புகளுக்காக புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களை தினமும் பப்பாளி உண்ணச் சொல்கிறார்கள். இதிலும்கூட இதன் பாதுகாக்கும் அம்சங்களுக்குக் காரணமாக இருப்பது இதில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள். புற்றுநோயின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உருவாகும் ஆக்ஸிஜனேற்றம் பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சேதமடைகிறது.

புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்க வேண்டும் என்றால் தினமும் பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும். பப்பாளிச் சாறுகள் மற்றும் அவை உண்மையில் எவ்வாறு உதவும் என்பது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

பப்பாளியால் வயிற்றுக்குக் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளியால் கிடைக்கும் மற்ற பிரதான நன்மைகளுள் ஒன்று செரிமானத்தில் இதன் தாக்கம். பப்பாளிக்குள் பாபின் என்ற என்சைம் அடங்கியுள்ளது. இந்த என்சைம் புரதத்தை உடைத்து அதை ஒருங்கிணைத்து ஜீரணிக்க உதவுகிறது.அது மட்டுமல்லாமல் பப்பாளியில் உள்ள இந்த என்சைம் எரிச்சலுடன் கூடிய குடல் சின்ட்ரோமால் (ஐ.பி.எஸ்.) அவதிப்படும் மக்களிடம் காணப்படும் குடல் தொடர்பான பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் வீக்கத்துக்கான அறிகுறிகளை அறிந்து மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.

நீங்கள் குடல் தொடர்பான ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிப்பட்டால், தினமும் ஒரு கிண்ணம் பப்பாளிப் பழம் சாப்பிட்டு அதன் பலன்களை அனுபவிக்கலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *