உடல் எடையை இயற்கை முறையில் குறைப்பது எப்படி ?

முறையற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் மக்கள் குண்டாதல் குறைபாட்டிற்கு ஆளாகி உள்ளனர் . ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லா வயது மக்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு, இள வயதிலேயே பருமனாக இருக்கும் எல்லோரும் நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய் வகைகள் போன்ற நோய்க்குறைபாடுகளை அடையும் நிலையை சரிசமமாக பெற்றுள்ளனர் என்றே கூறலாம்.ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.

வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

கடுங்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.

அன்னாசி

ஒரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். மறு நாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்ட வேண்டும். அதன் பிறகு தொப்பை குறைய ஆரம்பிக்கும்

எலுமிச்சை மற்றும் உப்பு

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

மாட்டுப் பால்

தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வர உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

புடலங்காய்

புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

கேரட் மற்றும் மோர்

தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

பப்பாளிக் காய்

பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

மிளகுத் தூள்

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பது நல்லது. அப்படி சூப் செய்து குடிக்கும் போது  அதில் மிளகுத் தூளை சேர்த்து குடித்து வர அதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.

சூப்

உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால் 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.

 

துளசி பானம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

எலுமிச்சை மற்றும் தேன்

இது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் ஒரு தக்காளியை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுன் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

முட்டைக்கோஸ்

எடையைக் குறைக்க நினைத்தால் முட்டைக்கோஸை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதற்கு அந்த முட்டைக்கோஸை சாலட்டாகவோ அல்லது வேறுவிதமாக சமைத்தோ சாப்பிடலாம்.

கறிவேப்பிலை

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *